டெல்லி: புலிகள் மீது தடையை நீக்க கோரும் சரத்

சரத்குமார் தலைமையில் இன்று டெல்லியில் ஈழத்தமிழர்களை காக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்க சரத்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் டெல்லி வந்துள்ளனர். அங்கு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,
ஈழப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் 8 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்களது சொந்த இடத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஈழத்துக்கு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும். அப்போது தான் இலங்கையில் தமிழர்கள் பலம் அதிகரிக்கும்.
இலங்கையில் பாதுகாப்பான பகுதியில் தமிழர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் கருணையின்றி குண்டுகளை வீசி வருகிறது. இதன்மூலம் ஈழப் பிரச்சினையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசுக்கு ஆர்வமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மத்திய அரசு உடனடியாக் மேற்கொள்ள வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆதரவு தருவார்கள்.
விடுதலைபுலிகள் மீதான தடையை இந்திய, இலங்கை அரசுகள் நீக்க வேண்டும். அப்போது தான அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழ்நிலை உருவாகும். அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை நடத்த தமிழகத்தில் இருந்து தனி குழு அமைக்கப்பட்டு அங்கு அனுப்பப்பட வேண்டும் என்றார் சரத்குமார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications