நீதிமன்ற கலவரம்: நீதி விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் போலீஸார் நுழைய உத்தரவிட்டது யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அது கேட்டிருந்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள், வன்முறையில் இறங்கியதால்தான் போலீஸார் தடியடி நடத்த நேரிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான நீதி விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இதுதவிர இணை ஆணையர்கள் சந்தீப் சிங் ரத்தோர், ராமசுப்ரமணி, துணை ஆணையர்கள் சின்ஹா, பன்னீர்செல்வம், சாரங்கன் ஆகியோரை உடனடியாக சென்னையை விட்டு வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications