ரவுடி 'கோழி' அருள் - 3 கூட்டாளிகள் கைது
நெல்லை: நெல்லையின் பிரபல ரவுடியான கராத்தே செல்வினின் கூட்டாளியான கோழி அருளையும், அவரது கூட்டாளிகள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மகன் அருள்ராஜ் என்ற கோழி அருள். கராத்தே செல்வினின் கூட்டாளியான இவர் மீது 7 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன.
பசுபதி பாண்டியன் மனைவி சிந்தியா கொலை முயற்சி வழக்கில் கோழி அருள் முக்கிய குற்றவாளி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோழி அருளை சுரண்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் நேற்று கோழி அருளின் நெருங்கிய கூட்டாளியான திசையன்விளை ஆனைக்குடியை சேர்ந்த ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நவீன பம்ப் ஆக்ஸன் ரக ஒற்றைக்குழல் துப்பாக்கி, ஏகே 47 பிஸ்டல், 59 தோட்டாக்கள் மற்றும் வெடிக்கபபட்ட 58 தோட்டாக்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக ராக்கெட் ராஜாவின் அண்ணன் கண்ணன், தூத்துக்குடி அருணகிரி மகன் மாரிமுத்து, ஆனைக்குடி சித்திரை மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராக்கெட் ராஜா, மேலப்பாளையம் அருள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுளளதாக டிஜிபி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கார்க் ஆகியோர் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications