வக்கீல்கள் போராட்டம்-தானே வாதாடிய மாணவர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதால், பிளஸ்டூ மாணவர் ஒருவர் தனது வழக்கில் தானே ஆஜராகி வாதாடினார்.
சென்னை உயர்நீதிமன்ற மோதலைத் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நீதிபதிகளும், கோர்ட் ஊழியர்களும் மட்டுமே பணிக்கு வந்து சென்று கொண்டுள்ளனர். வழக்கு விசாரணகைளில் மனுதாரர்களே வாதாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கார்த்தி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் வராததால் மாணவன் கார்த்தியே ஆஜராகி வாதிட்டார்.
மாணவன் கார்த்தி வாதிடுகையில்,
அரக்கோணம் தனியார் பள்ளியில் பிளஸ்2 சயின்ஸ் குரூப் படிக்கிறேன். மார்ச் 2-ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. பணமில்லாததால் ஹாஸ்டல் ஃபீஸ் 2 ஆயிரம் ரூபாய் கட்ட முடியவில்லை. இதனால், என் அம்மாவை வரவழைத்து டி.சி.யை கொடுத்துவிட்டார்கள்.
எனது தாயாருக்கு காது கேட்காது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இப்படி செய்தால் நான் எப்படி தேர்வு எழுதுவது என்று கூறி கதறி அழுதார்.
இதையடுத்து, தேர்வு எழுத மாணவர் கார்த்தியை அனுமதிக்க வேண்டும் என நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். மேலும், பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications