மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய கண்ணப்பன்

ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். பின்னர் ஆட்சியின் முடிவில் ஜெயலலிதாவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இடையில் அதிமுகவில் மீண்டும் சேர முயற்சித்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை.
இதையடுத்து திமுகவுடன் கூட்டணி வைத்தார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியைக் கலைத்து விட்டு ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகினார் கண்ணப்பன். தனது எம்.எல்.ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
நேற்று ஜெயலலிதா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கண்ணப்பன். கண்ணப்பனுடன் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர்.
தாய் வீட்டுக்கு வந்ததுவிட்டேன்!:
பின்னர் நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன், இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஒப்பற்ற தலைவியாக விளங்கும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளோம்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றுவோம்.
என்றென்றும் இந்த இயக்கத்தில் விசுவாசமாக செயல்படுவேன். அதிமுகவில் இணைந்ததில் மனம் நெகிழ்கிறது, தாய் வீட்டுக்கு வந்தது போல மகிழ்ச்சி பொங்குகிறது என்றார்..
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, அம்மா கட்டளை எதுவாக இருந்தாலும் சிரமேற்கொண்டு செயல்படுவோம். எங்களுக்கென்று தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவுமில்லை என்றார்.
பொன்னுசாமிக்கு திமுகவில் திடீர் பதவி:
இதற்கிடையே அதிமுகவிலிருந்து விலகி பின்னர் தேமுதிகவில் இணைந்து பிறகு அதிலிருந்தும் விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் மருங்காபுரி பொன்னுச்சாமிக்கு திமுகவில் தீர்மானக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் போரசிரியர் பொன்னுசாமி. அடுத்து வந்த திமுக ஆட்சியில் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தியதாக கூறி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தன்டணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொன்னுசாமி தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இணைந்தார்.
பின்பு அக் கட்சியிலிருந்தும் விலகி திமுகவில் இணைந்தார். ஆனால், இங்கும் அவருக்கு பெரிய அளவில் மரியாதை கிடைக்கவில்லை. இதனால் கடுப்பில் இருந்தார்.
இந் நிலையில் அவருக்கு திமுகவில் தீர்மானக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கண்ணப்பன் வழியில் அவரும் அதிமுகவுக்கே திரும்பலாம் என்று தெரியவந்ததால் இந்தப் பதவியை வழங்கியுள்ளது திமுக.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications