ஸ்டாலின், ரஹ்மான், மயில்சாமி அண்ணாதுரைக்கு அண்ணா பல்கலையின் டாக்டர் பட்டம்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டுவிழாவை ஒட்டி அவரது பெயரில் இயங்கி வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டுக்கும் பெருமையும் தேடித்தந்தவர்களை கவுரவிக்க முடிவு செய்தது.
இதையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், விஞ்ஞானி அண்ணாதுரை ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காகவும் சென்னையில் மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,
நிலவில் இந்தியாவின் காலடியை பதிக்கச்செய்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலை நிமிரச் செய்ததற்காக சந்திராயன்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கும்,
2 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அளவில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்ததற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான சுர்ஜீத் சிங் பர்னாலாவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
மார்ச் இறுதியில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மூன்று பேருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications