இலங்கையில் ஹிட்லர் காலத்தை விட கூடுதல் கொடுமைகள்: வைகோ
திருநெல்வேலி: இலங்கையில் ஹிட்லர் காலத்தை விடவும் கூடுதலான கொடுமைகள் நடந்து வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாளையங்கோட்டை சிறை வாசலில் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு நேற்று கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்திய வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலையில் அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் அடைக்கப்படுவதற்கு முன்பு சிறை வாசலில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை அரசு ஒரு இனத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ் தாய்மார்களுக்கு கருகலைப்பு நடத்தி சிசுக்களை தெருவில் வீசி வருகின்றனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 90 சிசுக்களை கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹிட்லர் காலத்தை விட கூடுதல் கொடுமைகள் இலங்கையில் தற்போது நடக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த தயங்குவதால் மற்ற நாடுகளும் யோசிக்கின்றன.
ராணுவ அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது இலங்கைக்கு அதிக ஆயுத சப்ளை செய்யப்பட்டது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் தூத்துக்குடியில் கருப்பு கொடி காட்டினோம்.
நேரு காலத்தில் இருநது கருப்பு கொடி போராட்டம் இருந்து வருகிறது என்றார் அவர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications