இன்று ஸ்டாலின் பிறந்தநாள் - தொண்டர்கள் வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். இருப்பினும், இலங்கை தமிழர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று தனது 57வது பிறந்தநாள். இதையொட்டி சமீபத்தில் அவர் விடுத்த அறிக்கையில், இலங்கை தமிழர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதனால் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால் சில தொண்டர்கள் நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சென்னை முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர்.
அரும்பாக்கம், ராஜரத்தினம் மைதானம், நந்தனம் உள்ளி்ட்ட பகுதிகளில் பேனர்கள் அதிகம் வைக்கப்பட்டிருந்தது.
இதை கேள்விப்பட்ட ஸ்டாலின் நேற்று சென்னை முழுவதும் சென்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்த சொன்னார்.
தொண்டர்கள் அதை அகற்றும் வரையில் அங்கேயே நின்று பின்னர் தான் கிளம்பினார். தன்னை புகழ்ந்து யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications