ரேணுகா மீது நிர்மலா வெங்கடேஷ் பாய்ச்சல்

மங்களூர் பப்பில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நிர்மலா வெங்கடேஷ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென நிர்மலா தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா வெங்கடேஷ் மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கிரிஜா வியாஸ் ஆகியோரை கடுமையாக சாடினார். தனது நீக்கத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பேட்டியின்போது நிர்மலா கூறுகையில், எனது நீக்கத்தில் அரசியல் சதித் திட்டம் அடங்கியுள்ளது. என்னை நீக்கியவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை.
எனது பெயரைக் கெடுப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட அரசியல் சதி இது. இதை நான் கண்டிக்கிறேன். தேசிய மகளிர் ஆணையத்தில், நான் மட்டுமே சட்டப்படியான தகுதி பெற்ற உறுப்பினர். எனது நேர்மை அனைவரும் அறிந்ததே.
மங்களூர் பப் தாக்குதல் விவகாரத்தை பெரிதுபடுத்தி கர்நாடகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முனைந்துள்ளார் ரேணுகா செளத்ரி. அதை விட முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளபோது பப் விவகாரத்தை மட்டும் அவர் பெரிதுபடுத்த முயலுகிறார்.
ஆந்திரா, உ.பி போன்ற மாநிலங்களில் மிகப் பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தார் ரேணுகா செளத்ரி?. என்னைப் பொறுத்தவரை கட்சி, அரசு என்பதை விட எனது மாநிலம் என்பதுதான் எனக்கு முக்கியம்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கிரிஜா வியாஸ், பப் தாக்குதல் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதில் வேண்டும் என்றே தாமதம் காட்டினார். நான் கொடுத்த அறிக்கையை தாக்கல் செய்வதில் அவர் வேண்டுமேன்றே இழுத்தடித்தார். எனவே எனது நீக்கத்திற்கு அவரும் ஒரு காரணம் என கருதுகிறேன் என்றார் நிர்மலா.
பத்திரிக்கையாளருடன் கடும் வாதம்
பேட்டியின்போது ஒரு செய்தியாளருக்கும், நிர்மலாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் எழுந்தது. இது பெரிய அளவிலான சண்டையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் நீண்ட நேரம் கடுமையாக வார்த்தைச் சண்டையில் இறங்கினர். சக பத்திரிக்கையாளர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications