யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
மதுரை: வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியம் குறித்த செய்தியை போடக் கூடாது என்று எந்த பத்திரிக்கையையும் நான் மிரட்டவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு நரேஷ்குப்தா பதிலளித்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சொத்து நல வாரியம் குறித்த செய்தியை போட வேண்டாம் என எந்த பத்திரிக்கையாளரையும் நான் மிரட்டவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை.
எனக்கே மார்ச் 3ம் தேதி மீடியாக்களில் வந்த செய்தியைப் பார்த்துதான் இந்த வாரிய நியமனம் குறித்தே தெரியும்.
நான் யாரையும் சென்று சந்தித்து எனக்கு பழக்கமில்லை. இதற்கு முன்பு முதல்வராக இருந்தவரைக் கூட நான் சந்தித்ததில்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் எந்தத் தலைவர்களையும் சந்திப்பதில்லை என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது.
முதல்வரை சந்திக்காததற்கு இதைத்தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.
வன்னியர் பொது சொத்து நலவாரியம் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. அரசு தரும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும். அப்படியே நான் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்களா?.
முதல்வர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போதே என் மீது இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறார் என்றார் குப்தா.
நேற்று வெளியிட்ட அறிக்கையில் குப்தாவை முதல்வர் கருணாநிதி ஒரு பிடி பிடித்தது நினைவுகூறத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications