சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்-திருமா
சென்னை: திமுக அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் சிதம்பரத்தில் கண்டிப்பாக போட்டியிடுகிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறக் கூடாது என காங்கிரஸ் கூறி வருகிறது. இருப்பினும் காங்கிரஸை சமாதானப்படுத்தி திருமாவளவனை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள திமுக விரும்புகிறது.
அதேசமயம், சிதம்பரம் உள்பட 3 தொகுதிகளில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும் இத்தனை சீட்களை திமுக தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியி்ல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிதம்பரம் தொகுதியில் தான் கண்டிப்பாக போட்டியிடப் போவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடித்து வருகிறது. இதுவரையிலும் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. கூட்டணி தொடர்பாக அவர்கள் அழைத்தால் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சிதம்பரம் மற்றும் 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி.
நாளை கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளேன். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications