லாகூர் தாக்குதல்-4 தீவிரவாதிகள் கைது: பாக்
லாகூர்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக நான்கு தீவிரவாதிகளை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இவர்கள் நான்கு பேரும் கராச்சி, லாகூர் மற்றும் ரஹீம் யார் கான் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. பெரிய அளவில் பலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் நான்கு பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களைத்தான் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகளை நாங்கள் பிடிக்கத் தொடங்கி விட்டோம். இது நல்ல அறிகுறியாகும்.
லாகூர் தாக்குதல் தொடர்பாக மீடியாக்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானை சுட்டிக் காட்டுவதும், பாகிஸ்தானில் எது நடந்தாலும் இந்தியாவை சுட்டிக் காட்டுவதும் வழக்கமாக உள்ளது. இருப்பினும் உண்மை என்ன என்பது தெரியும் வரை அமைதி காப்பது அவசியம் என்றார்.
லாகூர் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கானியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நான்கு பேரை கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications