1,600 சுபிக்ஷா கடைகள் மூடல்!
சென்னை: கடந்த 6 மாதங்களாக நிதி நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவித்த சுபிக்ஷா ஒரு வழியாக இழுத்து மூடப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 1600 கடைகளும் மூடப்பட்டன. இவற்றில் பணியாற்றிய 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 6 மாத சம்பள பாக்கியுடன் வெளியேறியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்நிறுவனத்திற்கு 137 கிளைகள் உள்ளன. இதில் 2,300 பேர் பணியாற்றி வந்தனர். தலைநகர் சென்னையில் 67 கடைகள் இருந்தன. இவற்றில் 1,300 பேர் வரை வேலை பார்த்தனர்.
தொடக்கத்தில் லாபத்தில் இயங்கிய இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பெரும் சரிவை சந்தித்தது.
நஷ்டத்தில் இருந்து மீள பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் கடைகள் சூறையாடப்பட்டன. சேதத்தைத் தவிர்க்க, 2 மாதங்களுக்கு முன்பு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.
சென்னையில் பணியாற்றி வந்த 1,300 ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் சம்பளம் எதுவும் தரப்பட வில்லை. அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பள பாக்கி உள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள சுபிக்ஷா கடையில் பணி யாற்றிய மானேஜர் ஒருவர் கூறும் போது. "சுபிக்ஷா நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இதில் கிடைத்த பணத்தை நிறுவன நிர்வாகிகள் அதன் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதனால்தான் நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கியது.
நஷ்டத்தில் இருந்து தப்பிக்க வங்கியில் இருந்து ரூ.800 கோடி கடன் பெறப்பட்டது. அதிலும் பலன் கிடைக்காததால் நிறுவனத்தை மூடிவிட்டனர்" என்றார்.
இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய ஐசிஐசிஐ வங்கி, நிர்வாக சீர்கேடுகள், பணத்தைக் கையாண்டதில் நடந்துள்ள தவறுகள் மற்றும் நாணயமற்ற வியாபாரம்தான் சுபிக்ஷாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என பகிரங்கமாகக் குற்றமசாட்டியது நினைவிருக்கலாம்.
-
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications