தொகுதி பங்கீடு-திமுகவுடன் பேச காங். ஐவர் குழு
டெல்லி: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச தங்கபாலு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச ஐந்து பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
இக்குழுவில் மாநில தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இக்குழு பேசி இறுதி செய்த பின்னர் தொகுதிகள் குறித்த விவரங்களை காங்கிரஸ் மேலிடம் வெளியிடும்.
தேமுதிக குறித்து பரிசீலனை:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் பாமக நீடிக்கிறது. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் ஆசாத்.
கூட்டணியில் பாமக நீடிக்கிறது:
பாமக, அதிமுக கூட்டணியில் சேரப் போவதாக செய்திகள் வெளி வருகிறதே என்று அவரிடம் குறிப்பாக கேட்டதற்கு,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் உள்ளது என்றார்.
கூடுதல் சீட் வேண்டும்-இளங்கோவன்:
இந் நிலையில் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறுகையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதியில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பதால் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வரும், போகும் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி முதல்வர் கருணாநிதியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்











Click it and Unblock the Notifications