வன்னியில் ராணுவ வெறி தொடருகிறது - 83 தமிழர்கள் படுகொலை
வன்னி: இலங்கை ராணுவத்தின் வெறித் தாக்குதல் நின்றபாடில்லை. வன்னியில் கடந்த 2 நாட்களில் நடந்த கொடும் தாக்குதலில் 83 தமிழர்கள் படுகொலையாகியுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் வியாழக்கிழமை இலங்கைப் படையினர் ஆர்ட்டிலரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 164 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இடைவிடாத எறிகணைத் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 123-க்கும் அதிகமானோர் காயமடைந்ததுள்ளனர்.
அதிகாலையில் நடந்த தாக்குதல் என்பதால் இருளில் தப்பிச் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால்ப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா படையினர் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications