கூட்டணியா, தனித்துப் போட்டியா?: விரைவில் அறிவி்ப்பேன் - விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோமா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோமா என்பது குறித்து விரைவில் முடிவை அறிவி்ப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் விஜயகாந்த் யாருடன் சேருவார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது தெரியாமல் உள்ளது. அவரது முடிவைப் பொறுத்து அரசியல் கணக்குகள் மாறக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று ஒரு பேச்சு நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று மரியாதை படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று விட்டு சென்னை திரும்பிய விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை விருகம்பாக்கத்தில் தனது மைத்துனரும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் கட்டியுள்ள புதிய வீட்டை விஜயகாந்த் திறந்து வைத்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கூட்டணி அமைக்கப் போகிறீர்களா அல்லது தனித்துப் போட்டியா என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது எனது கட்சி சம்பந்தப்பட்டது. கூட்டணி அமைப்போமா அல்லது தனித்துப் போட்டியிடுவோமா என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்த பின்னர் அதை முறைப்படி அறிவிப்பேன்.

உரிய நேரம் வர வேண்டும். வரும்போது நானே பத்திரிக்கைகளுக்கு தெரிவிப்பேன். சில பத்திரிகைககளி்ல தங்கள் இஷ்டத்திற்கு எதை எதையோ எழுதி வருகின்றனர். அதற்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது.

கட்சியிருடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவை அறிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+