நாளை சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று டெல்லியில்நடந்தது. நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடந்தது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தேர்தல் உத்திகள், கூட்டணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாளை தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிடுகிறது.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில சிபிஎம் செயலாளர் பிமன் பாசு கூறுகையில், இந்த முறை மேற்கு வங்கத்தில் கட்சிக்கு சற்று கடினமானதாகவே தேர்தல் இருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எப்படி அமையும் என்று தெரியவில்லை. இருப்பினும் காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் ஓரணியில் வந்திருப்பது நிச்சயம் இடதுசாரிகளுக்கு சவாலானதுதான் என்றார்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரிகள் மேற்கொண்டு வரும் கூட்டணிகள் குறித்து இறுதி செய்யப்பட்டது.
நாளை வெளியிடப்படவுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள், சொல்லப்பட வேண்டிய பிரச்சினைகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைகள் உள்ளிட்டவற்றை எப்படி மக்களிடம் கொண்டு போவது என்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மொத்தம் 90 மத்திய குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். நாளையும் மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் இறுதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications