கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 43 தமிழர்கள் நாடு திருமபினர்
சென்னை: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக இருந்து வந்த 43 தமிழர்கள் நேற்று சென்னை வந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகள் மாவட்டத்தை சேர்ந்த 43 தமிழர்கள் கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்க்கும் ஆசையி்ல் ஏஜென்டுகளை நாடியுள்ளனர்.
அப்போது ஏஜென்டுகள் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூற, அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் தான் அவர்களுக்கு கப்பல் வேலை என கூறி ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு சம்பளமும் முழுமையாக தரப்படவில்லை. அவர்கள் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டனர். கொடுமை தாங்க முடியாத அவர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு போவதாகவும், தங்களது பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்கும்படியும் கேட்டனர்.
ஆனால், இவர்களின் கோரிக்கைகள் காதில் வாங்க மறுத்த அந்த நிறுவனம். அவர்களை தொடர்ந்து துன்புறுத்திய வண்ணம் இருந்தது. இதையடுத்து அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் 8 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு, புகார் செய்தனர்.
இதை தெரிந்து கொண்ட அந்நிறுவனம் 43 பேரும் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறி, அவர்கள் மலேசிய குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை மீண்ட இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன்ர்.
நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications