இலங்கை வீரர்களைக் காத்த பஸ் டிரைவரின் தம்பி காஷ்மீர் தீவிரவாதி
லண்டன்: லாகூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது, இலங்கை கிரிக்கெட் வீரர்களை சாதுரியமான முறையில் கடத்தப்படுவதிலிருந்து காத்து புகழ் பெற்று விட்ட பாகிஸ்தான் பஸ் டிரைவர் மெஹர் முகம்மது கலீலின் தம்பி, காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பங்கேற்று இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலீலின் தம்பியான ஷகீல், 1995ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி...
காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றிருந்தார் ஷகீல். மேலும், பாகிஸ்தான் முழுவதும் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும், காஷ்மீரை விட்டு இந்திய ராணுவத்தை விரட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் விளங்கினார்.
1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடந்த தீவிரவாத வேட்டையின்போது இந்திய பாதுகாப்புப் படையினரால் ஷகீல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோளில் ஏ.கே.47 துப்பாக்கி, தலையில் தொப்பி, கையில் வாக்கி டாக்கி ஆகியவற்றுடன் தனது அண்ணன் கலீலை ஷகீல் வரவேற்பது போன்ற புகைப்படமும் கிடைத்துள்ளது.
ஷகீலுக்கு அப்துல்லா என்ற இன்னொரு பெயரும் உண்டாம் என்று டைம்ஸ் செய்தி கூறுகிறது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications