இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தோல்வி -அத்வானி

பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை அத்வானி நேற்று மாலை நாகர்கோவிலிலிருந்து தொடங்கினார்.
குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி..
இதையொட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் பாஜக தேர்தல் பிரச்சார துவக்க விழா பொது கூட்டம் நடந்தது. இதில் பாஜக பிரதமர் வேட்பாளர் எல்கே அத்வானி கலந்து கொண்டு கன்னியாகுமரி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணனை அறிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
இலங்கையிலும், மலேசியாவிலும் வாழும் தமிழர்களுக்காக கவலைப்படும் தமிழ் மக்களை பாராட்டுகிறேன். இலங்கை தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சிந்தித்து கூட பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களது சகோதரர்கள் படும் துன்பத்தை பார்த்து படும் கவலைகளை என்னால் உணரமுடிகிறது.
தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் டி்ல்லியில் வந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு உணர்வே இல்லாமல் செயலாற்றி வருவதாக அப்போதே நான் குற்றம் சாட்டினேன்.
கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாட்டையும், அதற்கு முன் 6 ஆண்டுகால வாஜ்பாய் அரசின் செயல்பாட்டையும் மக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
இது மன்மோகன்சிங் அரசு அல்ல. சோனியா காந்தியின் அரசு. மன்மோகன்சிங்கிடம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதிகாரம் கிடையாது. ஆனால் சோனியாகாந்தியிடம் அதிகாரம் இருக்கிறது. பொறுப்பு இல்லை. எனவே இந்த இரண்டு ஆட்சிகளையும் மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும்.
3வது அணிக்கு வாய்ப்பில்லை..
பாஜக, காங்கிரஸ் இல்லாமல் எந்த அரசும் உருப்பட முடியாது. இருதுருவ அரசியல் நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. எனவே மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாட்டால் விலைவாசி உயர்ந்துள்ளது.
உலகமே மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மே மாதம் உங்களை மீண்டும் சந்திக்கும்போது அரசியல் வானில் புரட்சிக்கரமான மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications