வருமுன் காப்போம் திட்டத்துக்கு இடைக்கால தடை - நரேஷ் குப்தா
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வருமுன் காப்போம் எனப்படும் ஏழைகளுக்கான இலவச மருத்துவ திட்டத்தை தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை எளியவர்கள் பயன்படும் வகையில் வரும்முன் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், ஞாயிறு தினங்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இத்திட்டம் மூலம் ஏழை மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடைமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா? வேண்டாமா? என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை கேட்டுள்ள தமிழக தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா அவர்களிடம் இருந்து உத்தரவு வரும்வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருமுன் காப்போம் திட்டம்தொடர்ந்து நடத்துவது தொடர்பாக சிவகாசி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், தலைமை தேர்தல் அதிகாரியிடம் கருத்து கேட்டிருந்தார். அதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். தேர்தல் கமிஷனின் உத்தரவு வரும்வரை வருமுன் காப்போம் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications