ஏமாற்றம் அளிக்கிறது ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: நெடுமாறன்
சென்னை: உயர்நீதிமன்ற மோதல் குறித்து விசாரித்து அறிக்கை அளித்துள்ள நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அளிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ஐகோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி காவல்துறை தாக்குதல் நடத்தியது. காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கிருஷ்ணா கூறியுள்ளார்.
300-க்கும் மேற்பட்ட வக்கீல்களை தாக்கி படு காயப்படுத்தியும் பலகோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை சேதப்படுத்திய காவலர்கள், அவர்களை ஏவிய அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு பரிந்துரை செய்யாமல் மென்மையான சொற்களால் மட்டுமே அவர்களை கண்டித்துள்ள நீதிபதி, வக்கீல்கள் ரவுடிகள் என வர்ணித்துள்ளதே அவருக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை வெளிபடுத்தியுள்ளது.
வக்கீல்கள் ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அறவழியில் போராடினார்கள். இதை மறைத்து அவர்கள் மீது வீண்பழிகளை சுமத்தி பிரச்சினையை திசை திருப்ப நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா முயற்சி செய்கிறார்.
நீதிபதி கிருஷ்ணாவின் விசாரணையின் மூலம் உண்மை வெளியாகும் என நம்பி ஏமாந்தோம். எனவே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட இருக்கிற மக்கள் விசாரணை குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கும்.
அதற்கு ஒத்துழைப்பு தருமாறு வக்கீல்களையும், மற்றவர்களையும் வேண்டிக்கொள்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications