இலங்கைக்கு மருத்துவக் குழு - ஏமாற்றுவேலை: நெடுமாறன்
சென்னை: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறோம் என்று மத்திய அரசு கூறியிருப்பது தமிழர்களை ஏமாற்றும் வேலை என்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 52 பேர்களைக் கொண்ட இந்திய ராணுவ மருத்துவ குழு செல்ல இருக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள கடலோர பகுதியில் அமைந்திருக்கும் புல்மோடை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து அங்கிருந்து மருத்துவ உதவி செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமேடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இருந்த மருத்துவமனைகளை சிங்கள ராணுவம் தாக்கி அழித்துள்ளது. ஏராளமான நோயாளிகளும், மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இருந்த மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருவது அவர்களின் உயிர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும்.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய அறிவுப்புக்களை இந்திய அரசு வெளியிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்ய இந்தியா விரும்பினால், செஞ்சிலுவை சங்கம் அங்கு செயல்படுவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
செஞ்சிலுவை சங்கத்தினர் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகம் ஆடுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications