லோக்சபா தேர்தல் சீட் - தேமுதிகவில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து கட்சியின் பொது செயலாளர் சொ.ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 9-ந் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.
பொது தொகுதிக்கு ரூ. 10,000
தமிழ்நாட்டில் பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக, தே.மு.தி.க. சென்னை-107 என்ற பெயரில் டி.டி.யாக (காசோலை) செலுத்த வேண்டும்.
22ம் தேதிக்குள் ..
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுதலும் நடைபெறும்.
யார், யார் போட்டியிடலாம்?
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாகவுள்ள அனைவரும் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு அணிகளை சேர்ந்தவர்களும், கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் ராமு வசந்தன்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications