வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்-தென் மாவட்டங்களில் கன மழை

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் பனி கொட்டுகிறது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் வானிலை அப்படியே தலைகீழாக மாறியது.
காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
நாகை, சீர்காழி, தஞ்சை, திருவாரூர், மன்னார் குடி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
அதேபோல ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
சென்னையில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. ஆங்காங்கு தூறல் மழை காணப்படுகிறது.
இந்த நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்பு-பாம்பனில் மீனவர் பலி:
இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொந்தளிப்புடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக பல படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதமடந்துள்ளன.
பாம்பன் பகுதியில் ஒரு மீனவர் கடல் கொந்தளிப்பில் சிக்கி பலியானார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications