அண்ணா சொல்லாததையா சம்பத் சொல்லி விட்டார்?: வைகோ
திருச்சி: இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு இந்தியா தொடர்ந்து ஆயுதம் வழங்குமேயானால் டெல்லியில் தமிழகத்திற்கு தனி தூதரகம் திறக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் பேசி இருக்கிறார் என கூறி இருக்கிறார்கள். இந்த கருத்தை அண்ணா சொல்லவில்லையா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் என்ஜினீயர் என்.ஷேக்முகமது மகன் திருமண விழா திருச்சியில் நேற்று நடந்தது.
அண்ணா சொல்லவில்லையா?
இதில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், வீர முழக்கம் இடும் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு வரவில்லை. அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு இந்தியா தொடர்ந்து ஆயுதம் வழங்குமேயானால் டெல்லியில் தமிழகத்திற்கு தனி தூதரகம் திறக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் பேசி இருக்கிறார் என வழக்கில் கூறி இருக்கிறார்கள். இந்த கருத்தை அண்ணா சொல்லவில்லையா?
திராவிட நாடு கோரிக்கையை தான் கைவிட்டு இருக்கிறோம். ஆனால் அதற்கான காரணங்கள் எல்லாம் உயிரோடு தான் இருக்கின்றன என்று அண்ணா கூறி இருக்கிறாரே?
சம்பத் சொன்னதை வழி மொழிகிறேன்..
இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசின் ஆயுதங்களும் அதனை அனுப்பி வைத்த சோனியாவும் தான் காரணம் என்பதால் நாஞ்சில் சம்பத் சோனியாவை முசோலினி வடிவில் பார்க்கிறேன் என பேசி இருக்கிறார். நான் அதை வழிமொழிகிறேன்.
எங்களுக்கு இறையாண்மை மீது நிறையவே நம்பிக்கை உண்டு. இறையாண்மைக்கு எதிராக நாங்கள் என்றும் செயல்பட்டதில்லை என்றார் வைகோ.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications