ஐநா மனித உரிமை சபை-பிரான்ஸ் தமிழர்கள் அறிக்கை
ஜெனீவா: ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமை சபையின் கூட்டத்தில் ஈழ பிரச்சினையில் தமிழர்களி்ன் அவலநிலையை எடுத்து கூறும் வகையில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அறிக்கை வினியோகம் செய்தது.
இலங்கை ராணுவத்தினரால் தினமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா என உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர்.
இதையடுத்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐநா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தின. ஆனால், இவைகளை இலங்கை கொஞ்சம் கூட காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் ஐநாவின் மனித உரிமை சபையின் 10வது பொது கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவாவில் நடந்தது.
அதில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கலந்து கொண்டு, இலங்கையில் தமிழர்களின் அவல நிலையை எடுத்துக்கூறும் பல ஆய்வுக் கட்டுரைகள், இது தொடர்பாக மற்ற நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள், ஐநா முன்னதாக இலங்கைக்கு போர் நிறுத்தும் தொடர்பாக விடுத்த அறிக்கை ஆகியவற்றை வினியோகி்த்தது.
ஐநா மனித உரிமை சபை தமிழர்களை விரைந்து காக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications