சங்கரன்கோவிலில் இரு தலித் வாலிபர்கள் கொலை
நெல்லை: சங்கரன்கோவில் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தலித் வாலிபர் கொல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில் முப்புடாதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் வழிபட்டு வந்த தலித் மக்களுக்கும், இன்னொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் மார்ச் 6ம் தேதி ஒரு சமூகத்தினர் பேச்சு வார்த்தைக்கு முன் வராததால் தலித் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவிழா ஏற்பாடுகளை தலித் மக்கள் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. திருவிழா ஏற்பாடுகளால் இன்னொரு பிரிவினர் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் திருவிழா பணிகளில் ஈடுபட்ட கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோரை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம், ஈஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். சுரேஷ் பலத்த காயமடைந்தார். தமிழக அரசும், காவல்துறையும் முன்னேச்சரிக்கையுடன் செயல்படாததால் தலித்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், இது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. கொலை வெறி தாக்குதல் நடத்தியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரூ. 5 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும்...
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், கோவிலில் மூன்று சமூதாய மக்கள் வழிபாடு நடத்த சட்டரீதியான பாதுகாப்பு வழங்காமல் பேச்சுவார்த்தையை நீடித்ததுதான் கொலைக்கு காரணம்.
இந்த சம்பவத்தில் சாதாரண கிராம மக்கள் ஈடுபடவில்லை. கூலிப்படையினரும் சம்பந்தபட்டு இருக்கிறார்கள். செந்தட்டி கிராமத்தில் திட்டமிட்டு மோதலை உருவாக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அரசு உரிய பாதுகாப்பு, உரிமைகளை வழங்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ. ஒன்றரை லட்சம் மட்டுமே அரசு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு ரூ. 5 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கிராமத்துக்கு செல்ல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications