ஹிமாச்சல்: ராகிங் கொடுமை-மாணவர் அடித்து கொலை
தர்மசாலா (இமாச்சலப் பிரதேசம்): இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவர் மூன்றாவது ஆண்டு மாணவர்களால் ராக்கிங் செய்யப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தர்மசாலாவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் அமான் கச்ரூ (19) என்ற மாணவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஹரியானா மாநிலம் குர்கான். பெற்றோர் தான்சானியாவில் இருக்கின்றனர். அவரது தந்தை அங்குள்ள பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அமான் படிக்கும் கல்லூரியில் இருக்கும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் இரவு ஆகிவிட்டால், குடித்துவிட்டு வந்து முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களை கண்டபடி தாக்கி காயப்படுத்தி இருக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் அமானும் ஒருவர். இதையடுத்து அவர் கல்லூரியில் மூத்த வீரர்கள் ராக்கிங் செய்து வருவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதே சமயத்தில் ஹாஸ்டலிலும் புகார் செய்துள்ளார். ஆனால், ஹாஸ்டல் நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் மூத்த மாணவர்கள் குடித்துவிட்டு மீண்டும் ராக்கிங் செய்துள்ளனர். அமானை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நெஞ்சு, முகம் மற்றும் காது பகுதிகளில் பலத்த காயம் அடைந்த இமான் ஹாஸ்டலில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
முதலில் இதை தற்கொலை எனக்கூறி மூடி மறைக்க முயன்ற ஹாஸ்டல் நிர்வாகம் சுமார் ஒரு நாள் தாமதத்துக்கு பின்னர் தான் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இரண்டு பேர் கைது...
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு, ஹாஸ்டல் வார்டனையும், மேலாளரையும் பணிநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அமானின் உறவினர் ஒருவர் கூறுகையில், அமான் ராக்கிங் குறித்து எங்களிடம் கூறினான். ஆனால், அது இவ்வளவு கொடூரமான விளைவை ஏற்படுத்தும் என எண்ணவில்லை என்றார்.
இது குறித்து உள்ளூர் போலீஸ் எஸ்பி கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில் பலியான மாணவன் அதிக மனவேதனையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரை மூன்றாவது ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். இதனால் ஞாயிற்றுகிழமை அந்த மாணவன் சுருண்டு விழுந்து இறந்துள்ளான். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
கொடூரமாகி வரும் ராகிங்குகள் ..
இந்தியா முழுவதும் ராகிங் கொடுமை அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. ராகிங்கைத் தடுக்க சட்டம், கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் என கிடுக்கிப் பிடி போட்டாலும் ராகிங் கொடுமைக்கு இதுவரை முடிவு கட்ட முடியில்லை என்பதே உண்மை.
முன்பெல்லாம் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறைக் கல்லூரிகளில்தான் பெருமளவில் ராகிங் இருந்தது. ஆனால் இப்போது அனைத்துக் கல்லூரிகளிலும் கிட்டத்தட்ட ராகிங் கொடுமை உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் அதிக அளவில் ராகிங் கொடுமை தலை விரித்தாடுகிறது. ஆனால், அது குறித்த செய்திகள் பெரிய அளவில் வருவதில்லை.
வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தென் மாநிலங்களில் ராகிங் கொடுமை கொஞ்சம் குறைவு தான் என்றாலும் தமிழகத்தில் பல உயிர்கள் ராகிங்குக்கு பலியாகியுள்ளதையும் மறுக்க முடியாது.
உதாரணமாக, சென்னையில், நாவரசு என்ற மாணவர் தலையை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் கொண்டு போய் போடப்பட்ட சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்றும் அகலாமல் உள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அப்பீல் செய்து, நிரபராதி என நிரூபித்து விட்டு அவர் வெளியில் வந்து விட்டார். நாவரசுவைக் கொன்றது யார் என்பது புரியாத புதிராகிப் போய் விட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications