காவல் நிலையத்தில் எஸ்ஐ தற்கொலை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள கரூர் புறக்காவல் நிலையத்தில் எஸ்ஐ ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது கரூர் புறக்காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமன் (55). இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் பயந்த சுபாவம் உடையவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் இரவு பணியில் இருந்த போது தூக்கம் வருவதாக சக போலீசாரிடம் கூறிவிட்டு கம்யூட்டர் அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு ஒரு போலீசார் சென்று பார்த்த போது அங்கு எஸ்ஐ ராமன் மின்விசிறியில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கியுள்ளார்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த எஸ்பி மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் எஸ்ஐ ராமன் தற்கொலைக்கு காரணம் என்ன என்று கரூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட எஸ்ஐ ராமனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேடு. இவருக்கு ஒரு மனைவி 2 மகன் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications