சென்னை மெட்ரோ-வடிவமைக்கும் பிரான்ஸ் நிறுவனம்

கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் திட்டதிதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முதல் கட்டணப் பணிகளுக்கான கான்ட்ராக்டுகள் விடப்பட்டன.
இந் நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து, அதைக் கண்காணித்து செயல்படுத்தும் பொறுப்பை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு மெட்ரோ ரயில்வே வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக 30 மில்லியன் டாலர் கான்டிராக்டை சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஏஜிஸ் ரயில் இந்தியா என்ற ஐந்து நிறுவனங்கள் அடங்கிய அமைப்பிடம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனமான ஏஜிஸ், இந்த கூட்டு நிறுவனத்திற்கு தலைமை வகிக்கும்.
மேலும், ஏகாம் டெக்னாலஜி கார்ப்பரேஷன் என்கிற பொறியியல் மற்றும் கட்டிடக் கலை நிறுவனமும் இதில் இடம் பெற்றுள்ளது.
மற்ற நிறுவனங்கள் குறித்து தெரியவில்லை. இருப்பினும் இந்த ஐந்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஏஜிஸ் நிறுவனம்தான் இந்த திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தப் போகிறது.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கான்டிராக்டுகளுக்கான டெண்டர் விடும் பணியை தொடர்ந்து மெட்ரோல் ரயில் கார்ப்பரேஷன் நிறுவனமே மேற்கொள்ளும்.
ஏஜிஸ் நிறுவனம், ஐரோப்பாவின் முன்னணி ரயில் திட்ட நிறுவனமாகும். அதி வேக புல்லட் ரயில்கள், பாதாள ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரயில் போக்குவரத்துத் திட்டங்களை இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு ஆசியாவிலிருந்து 9 சதவீத வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ஏஜிஸ் தலைமையிலான நிறுவன கூட்டமைப்புதான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை கான்டிராக்டை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் திட்டம் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 13 மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இந்தத் திட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நிதியுதவியும் உடனடியாக கிடைத்தது.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியில் தமிழக அரசு 15 சதவீதத்தை வழங்கும். 6 சதவீதம் கடன்கள் மூலம் பெறப்படும்.
இத்திட்டத்தின் முதல் கட்டப் (கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை) பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார்.
2015ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. அதே காலகட்டத்தில்தான் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டமும் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications