தொகுதிப் பங்கீடு: அதிமுக-மதிமுக 2வது சுற்று பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அதிமுக, மதிமுக இடையே நேற்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 2வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
அதிமுக தரப்பில் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோரும், மதிமுக சார்பில் திருப்பூர் துரைசாமி, மலர்மண்ணன், புலவர் செவந்தியப்பன், பாலவாக்கம் சோமு, வக்கீல் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு எட்டே கால் மணிக்கு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications