தூத்துக்குடி தொகுதிக்கு திமுகவில் ஏக கிராக்கி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் புதிய எம்.பி. தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். 39 தொகுதிகளுக்கும் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அமைச்சர் ராதிகா செல்வி, நடிகர் நெப்போலியன் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மனுக்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. தொகுதிகளில் போட்டியிடத்தான் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறதாம். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய தொகுதிகளுக்கு அதிகம் பேர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications