பால் தாக்கரே சூப்பர் மனிதர்-பவார் பாராட்டு
டெல்லி: பிரதமராகும் தனது கனவை மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார். இதற்காக சிவசேனாவுடன் கூட்டு சேரவும் அவர் தயாராக உள்ளார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசின் நம்பிக்கையை கொஞ்சம் கூடப் பெறாத கட்சி சரத் பவாரின் கட்சி தான். கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனையுடன் நட்பு பாராட்டி வரும் பவார் அவ்வப்போது தானே பிரதமராக வேண்டும் என்ற ஆர்வத்தையும் மறைக்காமல் வெளியில் சொல்லி காங்கிரசுக்கு எரிச்சலூட்டி வருகிறார்.
இப்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தாலும் சிவசேனையுடனும் அவர் தொடர்பில் தான் உள்ளார்.
மராட்டியரான பவார் பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, அவருக்காக பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ளவும் கூட முன் வந்தார்.
ஆனால், பவார்-சிவசேனைக் கூட்டணி மக்களிடையே எடுபடாது என்று தெரியவந்ததால் இருவருமே தனித்தனியே போட்டியிடுவது என்றும் தேர்தலுக்குப் பின் பவார் பிரதமராக வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு சேனா ஆதரவு தருவது என்றும் முடிவாகியுள்ளது.
இந் நிலையில் என்டிடிவிக்கு பவார் அளித்த பேட்டியில், சிவ சேனை ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல. பால் தாக்கரே மிகச் சிறந்த மனிதர். தனது மதவாத நிலையை சிவசேனா கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டால், அந்தக் கட்சியால் இன்னும் நிறைய வெற்றிகளைப் பெற முடியும்.
ஆந்திரம், குஜராத், கர்நாடகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் பதவியை வகித்துவிட்டனர். எனவே, இந்த முறை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பிரதமராவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என என் மாநில மக்கள் விரும்புகின்றனர்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வேண்டும் என்பது சிவசேனை கட்சியின் கொள்கையாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபா பாட்டீலுக்கு அக் கட்சி ஆதரவு அளித்ததன் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம் என்றார் பவார்.
பாஜக- சிவ சேனை தொகுதிப் பங்கீடு:
இதற்கிடையே மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி பாஜக 26 இடங்களிலும், சிவ சேனை 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே மகாராஷ்டிரத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைப்பது தொடர்பாக சிவசேனா ரகசிய பேச்சு நடத்தியது நினைவுகூறத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications