சோனியா இல்லாமல் மதசார்பற்ற அரசு அமையாது: அமர்சிங்
லக்னெள: காங்கிரஸ் தலைவர் சோனியா இல்லாமல் மதசார்பற்ற அரசு அமையாது என சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அமைப்பு கூட்டம் நேற்று லக்னெளவில் நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சி பொது செயலாளர் அமர் சிங் பேசுகையில்,
மூன்றாவது அணிக்கு மதசார்பு என்பது துணி மாற்றுவது போன்றது. சோனியா இல்லாத மதசார்பற்ற அரசு அமைவது என்பது சாத்தியமில்லை. இவர்கள் தங்களது சுயநலத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். மூன்றாவது அணி இந்திய அரசியலுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு.
இந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரு சமயம் பாஜகவுடன் கைகோர்த்தவை தான். இதனால் இவர்களை மதசார்பற்றவர்கள் என கூற முடியாது.
சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் மத்தியில் 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி செய்தார். அவர் மதசார்பற்றவர் என்றால் குஜராத் பற்றி எரிந்த போது, ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாமே.
ஜெயலலிதாவும், தேவே கவுடாவின் நிலையும் அது தான். தேவே கவுடாவுக்கு தன் மகன் முதல்வராக இருந்தால் பாஜக மதசார்பற்ற அரசாக தெரிந்திருக்காது.
மாயாவதியும், பாஜகவுடன் இணைந்து மூன்று முறை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அவர் தற்போது பிரதம வேட்பாளராகிவிட்டார். தேவே கவுடா மதசார்பற்றவராகி விட்டார் என்றார் அமர் சிங்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications