நேரு தொகுதியில் காமெடியனை நிறுத்தும் காங்.
லக்னோ: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வென்ற பூல்பூர் தொகுதியில் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவை நிறுத்த காங்கிரஸ் கட்சி யோசித்து வருகிறதாம்.
உ.பி. மாநிலம் பூல்பூர் தொகுதிக்கு தனிப்பெருமை உண்டு. இங்குதான் நேரு போட்டியிட்டு வென்று பிரதமரானார். தற்போது இந்தத் தொகுதி அலகாபாத்துடன் இணைக்கப்பட்டு அலகாபாத்-பூல்பூர் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிவி நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவத்சவை நிறுத்த காங்கிரஸ் யோசித்து வருகிறதாம்.
இதுகுறித்து ராஜூ கூறுகையில், உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் ரீத்தா பகுகுணா அலகாபாத்-பூல்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தொகுதியின் முழு விவரம், பெருமைகளையும் என்னிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ரீத்தா ஜோக் அடிக்கிறார் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். என்னை விட நன்றாக நகைச்சுவை செய்கிறாரே என்று கூட நினைத்தேன். ஆனால் சீரியஸாகாத்தான் கேட்கிறேன் என்றார் ரீத்தா. எனவே நானும் இதை சீரியஸாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
மார்ச் 13ம் தேதி ரீத்தா பகுகுணா என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சோனியா காந்தியை சந்தித்தேன். என்னை நன்றாகத் தெரியுமே என்றார் சோனியா. நானும், சோனியாவின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கும் என்றேன்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது சோனியா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் ராஜுவிடம் விளக்கி விட்டதாக சோனியாவிடம் ரீத்தா கூறினார் என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications