இன்னும் மருத்துவமனையில் சமரவீரா-மெண்டிஸ்
கொழும்பு: லாகூர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஏழு இலங்கை வீரர்களில் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாதம் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாட சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டு இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்பினர்.
தாக்குதல் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் சமரவீரா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இது குறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் தலைமை டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ் கூறுகையில், அவர்கள் இருவரும் நன்றாக தேறி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தொடர்ந்து கவனமாக மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடுவார்கள்.
சமரவீராவின் இடது தொடையில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கப்பட்டுவிட்டது. மெண்டிசின் தலையில் ஏற்பட்டுள்ள காயம் ஆறிவருகிறது. இவர்களுக்கென பிரத்யேக உடல்அசைவு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் பல நாட்களுக்கு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் டாக்டர் கீதன்ஜனா மெண்டிஸ்.
காயமடையாத இலங்கை வீரர்கள் அடுத்த வாரம் பயிற்சியை துவக்கவிருக்கின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications