நாளை திமுகவில் இணையும் எல்ஜி-செஞ்சி
சென்னை: போட்டி மதிமுக நடத்தி வரும் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நாளை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டு அவர்களும் திமுகவில் இணைகின்றனர்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மதிமுகவை விட்டு இருவரும் வெளியேறினர். இவர்களுடன் சில நூறு தொண்டர்கள் மட்டுமே கட்சியை விட்டு விலகினர். ஆனாலும் போட்டி மதிமுகவாக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்க வசதியாக இப்போது இருவரும் திமுகவில் இணைகின்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணையும் இவர்கள் கட்சியையும் இணைக்கின்றனர்.
இதையொட்டி நகர் முழுவதும் எல்.ஜி, செஞ்சி ஆகியோரின் படங்களுடன் ''எங்களது பொது வாழ்க்கைப் பயணம் கறைபடியாமல் தொடர சங்கமம் ஆகிறோம், கலைஞர் அவர்களின் கரம்பற்றுகின்றோம்'' என்ற வாசகங்களுடன் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
'முறைப்படி' இணையும் மு.கண்ணப்பன்:
இதற்கிடையே மதிமுகவிலிருந்து விலகி விட்ட அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்ரமணியமும் வரும் 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் முறைப்படி திமுகவில் இணைகின்றனர்.
முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தது தொடர்பாக கண்ணப்பனுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன் மதிமுகவை விட்டு விலகினார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் டி.கே.சுப்ரமணியமும் ராஜினாமா செய்தார்.
இவர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், வருகிற 23ம் தேதி திமுகவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து சுப்ரமணியம் கூறுகையில், 23ம் தேதி திமுகவில் இணையலாம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதன்படி 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், கண்ணப்பனும், நானும், எங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறோம்.
பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் மதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது என்றார் சுப்ரமணியம்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications