ராணுவம் மீது புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்
கொழும்பு: வன்னிப் பகுதியில் ராணுவ சீருடையில் வந்து விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ராணுவத்தின் முன்னெடுப்புகளை விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு தடுத்து வருகின்றனர்.
இதனால் முன்பு போல வேகமாக முன்னேற முடியாமல் தத்தளிக்கிறது இலங்கை ராணுவம்.
இந்த நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதல்களையும் புலிகள் அதிகரித்து வருகின்றனர்.
நேற்று ராணுவ வீரர்களைக் குறி வைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில்,
புதுக்குடியிருப்புப் பகுதியில், ராணுவ நிலை ஒன்றை நோக்கி ராணுவ சீருடையில் ஒரு நபர் வந்தார். இதையடுத்து அவரைப் பரிசோதிக்க ஒரு ராணுவ வீரர் சென்றார். அவர் நெருங்கி வந்தபோது அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
அதிர்ஷ்டவசமாக இதில் ராணுவ தரப்புக்கு எந்த உயிர்ச்சேதமும் இல்லை என்றார்.
இன்னொரு பகுதியில், 14 விடுதலைப் புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் நாணயக்காரா தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications