வன்னியர் வாரியம்: கருணாநிதி, நரேஷ் பேச்சு - விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
சென்னை: வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் குறித்த அறிவிப்பு தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று காலை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு நரேஷ்குப்தா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இந்த செய்தி பத்திரிகைகளில் வெளி வராமல் தடுக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார் முதல்வர் கருணாநிதி.
மேலும், நரேஷ்குப்தா, இதுவரை என்னை மரியாத நிமித்தமாக கூட வந்து சந்திக்கவில்லை. அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், தமிழக அரசுதான் அவருக்கு சம்பளம் தருகிறது. தேர்தல் ஆணையப் பணி முடிந்ததும் அவர் மீண்டும் தமிழக அரசிடம்தான் வர வேண்டும் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வரின் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விளக்கி அறிக்கையாக அனுப்பியிருந்தார் நரேஷ்குப்தா.
இதையடுத்து தற்போது, இதுகுறித்து விளக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக 8 பக்க கடிதம் ஒன்றையும் தமிழக தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications