இனி நீதிபதிகளை யுவர் ஆனர் என கூப்பிட மாட்டோம்: வக்கீல்கள்
சென்னை: இனிமேல் நீதிபதிகளை யுவர் ஆனர், மை லார்ட் என கூப்பிட மாட்டோம். திரு என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவோம் என சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களுக்கு சமீபத்தில் தலைமை நீதிபதி கோகலே பணிக்குத் திரும்புமாறு கண்டிப்பு கலந்த கோரிக்கையை விடுத்தார். இதனால் வக்கீல்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து நீதிபதிகளை இனிமேல் பெயரைச் சொல்லியோ அல்லது மிஸ்டர் என்ற அடை மொழியை மட்டுமோ பயன்படுத்தி அழைப்போம். யுவர் ஆனர், மை லார்ட் போன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் மற்றும் பல்வேறு வக்கீல்கள் சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், கோர்ட்டுகளில் ஆஜராக வேண்டும் என எங்களுக்கு அறிவிக்கை விடப்பட்டுள்ளது. இது மிரட்டல். இதை நாங்கள் நீதிபதிகளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
எங்களை நீதிபதிகள் மிரட்டியிருப்பதால், நாங்களும் இனிமேல் யுவர் ஆனர், மை லார்ட் என்று அழைக்க மாட்டோம். மிஸ்டர் என்று மட்டும் சேர்த்து கூப்பிடப் போகிறோம் என்றார்.
இந்த ஆண்டில் இதுவரை சென்னை உயர்நீதிமன்றம் மொத்தமே 9 நாட்கள்தான் இயங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications