தமிழகம்-எஸ்எஸ்எல்சி தேர்வெழுதும் 137 கைதிகள்
நெல்லை: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு எழுத 137 கைதிகள் சிறையில் மும்முரமாக படித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு வருகிற 25ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வை சுமார் 8.42 மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இவர்கள் தேர்வு அதே நாளில் தமிழகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 137 கைதிகளும் தேர்வு எழுதவுள்ளனர்.
கையும் களவுமாக பிடிபட்ட இவர்கள் சிறையில் தற்போது புத்தகமும், கையுமாக உலா வருகின்றனர். சிறை என்பது தண்டனைக்குரியது அல்லது அல்ல மனிதனை மாற்றும் ஒரு பள்ளி என்பது சரியாகி வருகிறது.
பாளை மத்திய சிறையில் 32 கைதிகளும், மதுரை சிறையில் 35 மற்றும் சென்னை புழல் சிறையில் 17 பேரும் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். இதை வேலூர், கோவை, சேலம் ஆகிய சிறையிலும் சில கைதிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், கையேடுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை சில தொண்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
தேர்வு எழுத உள்ளவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள், 7 மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் அடங்குவர். பாளை சிறையில் பிஏ, பிஎஸ்சி, எம்ஏ, எம்.பில் ஆகிய பட்டபடிப்புகளை 50க்கும் மேற்பட்டோர் தொலை தொடர்பு கல்வி இயக்கங்கள் மூலம் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறைக்குள்ளேதான் தேர்வு நடப்பது வழக்கம்.
அதுபோல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் கைதிகளுக்கும் சிறைக்குள்ளேயே தேர்வு மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என சிறை துறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு மையத்தை சிறைக்கு வெளியே அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications