பாஜக 'கண்டறிந்த' விஜய்காந்தின் 5 குழப்பங்கள்!

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கை சுகாதார அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டிசில்வா அந் நாட்டில் நடைபெறும் போருக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது மத்திய காங்கிரஸ் அரசு பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதை போல தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஆதரவாகவும் இருந்து விட்டு மருத்துவ உதவிகளையும் இந்திய அரசு செய்து வருகிறது. இதை மக்கள் முன் பாஜக அம்பலப்படுத்தும்.
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பச்சையான மதவாத அரசாக செயல்படுகிறது. ஜவஹர் லால் நேரு காலம் தொடங்கி பல் வேறு பிரதமர்கள் ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி உரையில், தாழ்த் தப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்புகள் வரும்.
ஆனால் மன்மோகன் சிங் அரசில் ஜனாதிபதி உரையில் சிறுபான்மை யினருக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்லாமியருக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவொரு வகுப்புவாத அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது.
இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம். மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டம் என்பதை ஏற்க முடியாது. அரசியல் சாசனத்தில் கூட ஒரு பொதுவான சட்டம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நாங்கள் அமல்படுத்துவோம்.
தற்போது காங்கிரஸ் அகில இந்திய அளவில் பலவீனப்பட்டு விட்டது. பிகாரில் காங்கிரசுக்கு 3 இடம் கொடுத்து அவமானப்படுத்தியுள்ளனர். அங்கேயே 3 இடம், உ.பியில் 17 வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவமரியாதை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்கக் கூடாது என காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் கருணாநிதியோ சிறுத்தைகள் இங்குதான் இருப்பார்கள் என்று சொல்கிறார். இதை எதிர்க்க இங்குள்ள காங்கிரசுக்கு திராணி இல்லை.
இது போல மற்ற மாநிலங்களிலும் காங்கிரசுக்கு உரிய மரியாதை இல்லை. 50 ஆண்டு ஆட்சி புரிந்த காங்கிரசின் நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. பாமகவை தங்கள் கூட்டணியில் வைத்திருப்பதற்காக விடுதலை சிறுத்தைகளை திமுக பிடித்து வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தெளிவான அரசியல் நிலை இல்லை. பண்பட்ட அரசியல்வாதிகளை பார்க்க முடியவில்லை. ஒரே கட்சி இரண்டு கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதன் மூலம் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. இது போன்ற கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
சில கட்சிகள் தேர்தல் வரை ஒரு அணி, தேர்தல் முடிந்த பிறகு வேறு அணி என்ற நிலையில் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் கூட்டணிக்கு 7 இடம்தான் அதிகம். ஆனாலும் நேர் எதிராக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் துணையோடு ஆட்சி அமைத்தார்கள். அது விதிவிலக்குதான். ஆனால் இப்போது விதிவிலக்குகளே விதியாக மாறும் அளவுக்கு நாட்டின் தலைவிதி மாறி இருக்கிறது.
தேமுதிகவுடன் அதிகாரபூர்வமற்ற வகையில் விஜயகாந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறோம். ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவர் 5 வித நிலைப்பாட்டில் குழம்பி இருக்கிறார். காங்கிரடன் கூட்டணியா? அதிமுக கூட்டணியா?, தனித்து போட்டியிடுவதா?, தேர்தலை புறக்கணிப்பதா?, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா? என்று 5 விதமான குழப்பத்தில் இருக்கிறார்.
திமுக, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால்தான் விஜயகாந்த் 8 சதவிகித வாக்குகளை பெற்றார். அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் தனித்தன்மையை இழந்து விடுவார். தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது. தேர்தலை புறக்கணித்தால் கட்சி அடையாளம் இல்லாமல் போய்விடும்.
எனவே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தான் அவருக்கு நல்லது. 20ம் தேதிக்குள் விஜயகாந்த் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
நடிகர் சரத்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நடிகர் கார்த்திக் நேரடியாக இன்னும் பேசவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி குழப்பம் முடிந்த பிறகு நாங்கள் போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிப்போம்.
குஜராத், கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஆடம்பர தேர்தல் பிரச்சாரத்தை காண முடியாது. கொடிகள், தோரணங்களை எங்கேயும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தேர்தலை தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் அதன் பலத்தை, அதிகாரத்தை முழுமையாக பிரயோகித்து, பாஜக போன்ற கட்சிகளும் சமபலத்தில் நின்று தேர்தலை சந்திக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வருண் காந்தி அமைதியானவர். சாந்தசொரூபி. அவர் இப்படி பேசியிருப்பாரா தெரியவில்லை. அவர் பேசியது உண்மை என்றால் அது பாஜக, ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு ஏற்றதல்ல. இருந்தாலும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் வேரோடு அழிப்போம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
சேது சமுத்திர திட்டம் பற்றி தேர்தலில் பேச வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். அகில இந்திய அளவில் அவர்கள் இந்த பிரச்சினையை எடுத்து வைத்தால் நாங்களும் மக்களிடம் அதை விளக்க தயாராக இருக்கிறோம்.
ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி விவகாரம் பெரிய இடத்து விஷயம். அது பற்றி நான் எல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications