பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க செபி முடிவு!
மும்பை: பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி முடிவு செய்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் காலை 9.55-க்குத் துவங்கி, 3.30க்கு முடிவடைகிறது. ஆனால் உலக பங்குச் சந்தைகளின் நேரம் பெரும்பாலும், இந்திய நேரத்துக்கு முன்பாகவே, பின்பாகவோ அமைந்துள்ளன.
உதாரணத்துக்கு அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகள் பல மணிநேரம் முன்னதாகவும், ஆசிய நாடுகளின் முக்கியப் பங்குச் சந்தைகள் நேரம் சில மணிநேரம் தாமதமாகவும் உள்ளன.
இந்த நேர ஏற்றத் தாழ்வுகளால், இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வோரு்க்கு பல முக்கிய தகவல்கள் தெரியாமலேயே போகின்றன. சமயத்தில் இந்த தகவல்கள் சந்தையை நிர்ணயிக்கும் சக்திகளாகவும் உள்ளன. இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டே ஐரோப்பிய நாட்டு சந்தைகள் சில 23 மணிநேரம் இயங்கும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.
ஒரு மணிநேரம் மட்டும்தான் இந்த சந்தைகளில் பிரேக் இருக்கும். இவ்வளவு நீண்ட நேரம் சந்தை இயங்குவதால், பல முதலீட்டாளர்களின் இடர்பாடுகள் குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
எனவே இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தையும் நீட்டிக்க செபி முடிவு செய்துள்ளது. தனது முடிவு குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது செபி.
அனைவரது கருத்துக்களையும் கேட்ட பின்னர், அவர்களின் விருப்பத்துக்கேற்ப வர்த்தக நேரம் நீட்டிக்கப்படும் என செபி அறிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications