சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் திறப்பு - ரூ.2 லட்சம் வசூல்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் வைக்கப்பட்ட உண்டியலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் ரூ. 2 லட்சம் வசூலாகியுள்ளது.
தமிழகத்சின் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் அங்கு அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது.
அந்த உண்டியலைத் திறக்க தீட்சிதர்கள் தரப்பில் இழுத்தடித்ததால் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக சர்ச்சை நீங்கி உண்டியல் திறக்கப்பட்டது.
அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள், கடலூர் உதவி ஆணையர் ஜகன்னாதன், நடராஜர் கோயில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் தாசில்தார் ஞானவன் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அதில் ரூ.2 லட்சம் காணிக்கைப் பணம் இருந்தது. மேலும் அமெரிக்க டாலர்கள், இலங்கை கரன்சிகளும் இருந்தன.
இது பற்றி அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த மாதம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் 45 நாட்களு்க்கு பிறகு திறக்கப்பட்டது. அந்த உண்டியலை திறந்து எண்ணப்பட்டபோது அதில் ரூ.2 லட்சம் இருந்தது.
இந்த தொகை நடராஜர் கோயிலின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உதவி ஆணையர் அந்தஸ்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயிலின் வளர்ச்சி பணிக்காக ரூ.17 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கோயில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications