அரகோணத்தை குறி வைக்கும் ஜெகத்ரட்சகன்!
அரக்கோணம்: வீர வன்னியர் பேரைவ தலைவர் ஜெகத்ரட்சகன் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலக்கியவாதி, பத்திரிக்கையாளர், அரசியல்வாதி, கல்வியாளர் என பன்முகங்களை கொண்டவர் ஜெகத்ரட்சகன். முன்பு அதிமுகவில் இருந்தார். பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்தில் இணைந்தார். தற்போது வீர வன்னியர் பேரவையை நடத்தி வருகிறார். கூடவே ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.
முதல்வர் கருணாநிதியின் தீவிர பக்தராகவே மாறி விட்டார் ஜெகத்ரட்சகன். அதை, சமீப காலமாக முதல்வரை வாழ்த்தியும், பாராட்டியும், புகழ்ந்தும் ஜெகத்ரட்சகன் வெளியிட்டு வரும் கவிதைகள், அறிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது திமுக ஆதரவுடன் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளாராம் ஜெகத்ரட்சகன்.
இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகம் உள்ளதாலும், திமுக கூட்டணி வலுவாக உள்ளதாலும் வெற்றியை எளிதில் கைப்பற்றிவிடலா என கணக்கு போடுகிறாராம் ஜெகத்.
திமுக தலைமையிடம் தொகுதியைக் கேட்டுள்ளாராம். இதுவரை உறுதியான பதில் வரவில்லையாம். ஆனால் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜெகத்ரட்சகன்.












Click it and Unblock the Notifications