ஐபிஎல் வெளிநாட்டுக்கு மாறினால் ரூ.200 கோடி நஷ்டம்
மும்பை: பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் ஏதாவது ஒரு வெளிநாட்டில் நடத்தினால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு( பி.சி.சி.ஐ.) ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.
ஆனால் இந்த இழப்பு ஒரு பொருட்டல்ல... நம்பகத்தன்மையைக் காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் லலித் மோடி.
பொதுத் தேர்தலுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளை போட்டிகளை நடத்துங்கள், முழு பாதுகாப்பு தருகிறோம் என இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன.
ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என்றும் உடனடியாக போட்டிகளை நடத்தியே தீருவோம் என்றும், இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாவிட்டால், தென் ஆப்பிரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது ஐ.பி.எல்.
போட்டிகள் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து மே 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. பொதுத்தேர்தலும் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து மே 13ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஐ.பி.எல்.லின் 59 போட்டிகளை நடத்த இருக்கும் நாடு எது என்று இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்க உள்ளனர்.
ஐ.பி.எல்.லின் தலைவர் லலித் மோடி இது குறித்து பேசியபோது, இதனால் ஏற்படப்போகும் எல்லா நஷ்டங்களையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்றார். இந்த மாற்றங்களால் ரூ.200 கேடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறித்துள்ளார்.
ஸ்பான்ஸர்கள் அதிருப்தி!
இந்நிலையில், ஐபிஎல் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்யும் விளம்பர நிறுவனங்கள்.
வெளிநாடுகளில் போட்டி நடைபெறுவது உறுதி என்றால் நாங்கள் விலகிக்கொள்கிறோம், வேறு போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கிறோம் என அறிவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட ரூ.600 கோடி இழப்பு ஏற்படும் என அஞ்சுகிறது ஐபிஎல்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications