வருண் காந்தி குற்றவாளி - வேறு வேட்பாளரை நிறுத்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. உ.பி. மாநிலத்தில் உள்ள தனது தாயாரின் தொகுதியான பிலிபித்தில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக, துவேஷமாக பேசினார். கைகளை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியது மத வெறியைத் தூண்டும் வகையில் அமைந்தது.
இதையடுத்து வருண் காந்தி மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின. இதுதொடர்பான சிடிக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தன் மீதான புகார்களை மறுத்தார் வருண் காந்தி. தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வருண் காந்தி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இதன் இறுதியில், வருண் காந்தி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தனது 10 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:
இம்மாத தொடக்கத்தில் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுகள், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மிகவும் தரக்குறைவான, முற்றிலும் ஏற்க முடியாத பேச்சுகளாக உள்ளன.
மத உணர்வை தூண்டும்வகையில் பேசிய அவர், இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர். அவர் கோர்ட்டால் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், அவர் போட்டியிட சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று தெரியும்.
எனவே, வருண்காந்தியின் பேச்சில் உள்ள கருத்துகளை அங்கீகரிக்கவில்லை என்று பா.ஜனதா கூறி இருப்பதால், அக்கட்சி நடப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு வருண்காந்தியை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
வருண் காந்தி குற்றவாளி என்று மட்டுமே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் கோர்ட் மூலமாக அவர் இன்னும் குற்றவாளி என்று சொல்லப்படாததால் அவருக்கு போட்டியிட தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், அவரை நிறுத்தக் கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், எந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியிருக்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு அறிவுரைதான், உத்தரவு அல்ல என்று கூறினார்.
இன்னொரு துவேஷப் பேச்சு
இதற்கிடையே, வருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.
இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.
இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.
எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி.
வருண் காந்தி மீதான இந்த தொடர் புகாரால் அடுத்தடுத்து பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications