ஐபிஎல் போனதால் நஷ்டம் இல்லை -குஜராத் கலவரம்தான் தேசிய அவமானம்: ப.சிதம்பரம்

ஐபிஎல் 2வது போட்டித் தொடரை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை, தேர்தல் பாதுகாப்புப் பணிகள் உள்ளன. மேலும் பல மாநிலங்களும் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் தரவில்லை. எனவே போட்டியை வேறு தேதிக்கு மாற்றுங்கள் என்று மத்திய அரசு ஐபிஎல் நிர்வாகத்தை வலியுறுத்தியது.
இதையடுத்து போட்டி அட்டவணைகளை பலமுறை மாற்றி மத்திய அரசை அணுகியது ஐபிஎல் நிர்வாகம். இருப்பினும் தேர்தல் காலத்தின்போது போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியே போட்டிகளை நடத்தப் போவதாக நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும், மத்திய அரசையும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளையும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
அதேபோல இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடைய அருண் ஜேட்லி, நரேந்திர மோடி ஆகியோரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதற்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்புடன் நடத்த முடியும். ஆனால், முழு அளவிலான பாதுகாப்பை மே 16ம் தேதிக்குப் பிறகுதான் தர முடியும்.
இந்தியாவில் உள்ளதைப் போல மிகச் சிறந்த பாதுகாப்பை இவர்களுக்கு வேறு யார் வழங்குவார்கள்? இந்தியாவில் விளையாடுவது மட்டும்தான் இவர்களுக்குப் பாதுகாப்பானது என்பது புரியாமல் தேசத்தை அவமானப்படுத்தும் முயற்சிகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் மத்திய அரசு மீது பாய்ந்துள்ளனர். விமர்சித்துள்ளனர். அவை தேவையற்றவை.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஐபிஎல் என்பது விளையாட்டு மற்றும் பிசினஸ் சார்ந்தது. அதில் அரசியலைக் கலக்கத் தேவையில்லை.
ஐபிஎல் போட்டிக்கான தேதிகள் வேண்டுமேன்றே தேர்தல் நேரத்தில் வருவது போல மீண்டும் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடக்க வேண்டும் என விரும்புபவர்கள், ஒருமுறையாவது, இங்குள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேதியை நிச்சயத்திருக்க வேண்டாமா?
ஐபிஎல் விளையாட்டை இந்தியாவில் நடத்த முடியாதபடி மத்திய அரசு செய்து விட்டது. இது தேசிய அவமானம் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். உண்மையில், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம்தான் தேசிய அவமானம் என்றார் ப.சிதம்பரம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications