அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது.
ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார்.
விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications